Thursday , September 24 2020
Breaking News

யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட நான்கு நகரங்களை பலநோக்கு வர்த்தக நகரங்களாக அபிவிருத்தி செய்ய திட்டம்.

யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட நான்கு நகரங்களை பலநோக்கு வர்த்தக நகரங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகியவற்றுடன் அம்பாந்தோட்டையையும், பலநோக்கு வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் இரண்டு பிரதான துறைமுகங்கள், இரண்டு விமான நிலையங்களை இணைத்து, சி வடிவிலான வர்த்தக நடைபாதை ஒன்றை உருவாக்குவதன் மூலம், நாட்டை சர்வதேச சந்தையுடன் போட்டியிடச் செய்வதே தமது இலக்கு என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *