Tuesday , September 29 2020
Breaking News

வடக்கு, கிழக்கில் பொலிசாரிடம் இருந்த பாதுகாப்பு பணிகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தலின் போது, பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரின் உதவி கோரப்படும் என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து விளக்கமளித்துள்ள அவர், தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 69 ஆயிரம் பொலிசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இவர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும், புலனாய்வுப் பிரிவினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார். மேலும் 10,500 சிவில் பாதுகாப்புப் படையினரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தலின் போது, பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரின் உதவி கோரப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பொலிசார் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், பொலிசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3,069 நடமாடும் பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *