Tuesday , September 29 2020
Breaking News

வாக்களிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகள், வாக்குச்சீட்டுகளை அனுப்பும் பணி இன்று காலை ஆரம்பம்.

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பொதுத் தேர்தல் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஏனைய தேர்தல் அதிகாரிகள் இன்று காலை முதல் தமது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளனர்.

மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மத்திய நிலையங்களில், வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளிடம், வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் தேர்தலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் இன்று ஒப்படைக்கப்படும். இதையடுத்து, வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் மூலம் வாக்களிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை வாக்களிப்பு நிலையங்களை கிருமி தொற்றுநீக்கம் செய்யும் நடவடிக்கைள் நேற்று இடம்பெற்றன. இன்றும் தொற்றுநீக்கும் பணிகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக 12,995 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,452 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில், வாக்களிப்பதற்கு 1 கோ 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 1,785,964 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1,348,787 பேரும் கண்டி மாவட்டத்தில் 1,129,100 பேரும் தகுதி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *