Wednesday , September 30 2020
Breaking News

வன்முறைகள் நடைபெறக் கூடிய பகுதிகளுக்கு விசேட கண்காணிப்பு குழுக்களை அனுப்பியது கபே அமைப்பு.

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வன்முறைகள் நடைபெறலாம் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு கண்காணிப்பாளர்களின் நிபுணர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி, அம்பாறை, அம்பாந்தோட்டை, நாவலப்பிட்டி, ஹங்குராங்கெத்த, கரநாகல, பத்தளம் ஆகிய இடங்கள் வன்முறைகள் நடக்கக் கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்த இடங்களில் கண்காணிப்பை மேற்கொள்வதற்காக, பல்கலைக்கழக கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், மூத்த குடிமக்களைக் கொண்ட சிறப்பு நிபுணர் குழுக்கள் கொழும்பில் இருந்து ஏற்கனவே புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி மேலும் குறிப்பிட்டார். இவர்கள் உள்ளூர் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும், அவர் கூறினார்.

அதேவேளை மற்றொரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல், நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு பணிப்பாக 5000 கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளதாகவும், 250 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *