Thursday , September 24 2020
Breaking News

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி தீபிகா உடகம, விலகியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், கலாநிதி தீபிகா உடகம பதவி விலகலை, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரை அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் நீடிக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அம்பிகா சற்குணநாதன் கடந்த மார்ச் மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வரவுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி தீபிகா உடகம விலக முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *