Monday , September 28 2020
Breaking News

வாக்குகளுக்கு பணம் கொடுத்தால் ஆசனத்தை இழக்க நேரிடும்- தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை.

வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பதவியிழக்க நேரிடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் பணம், புடைவைகள், மதுபானம், அரிசி போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்குவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வேட்பாளர்கள் பணம், மற்றும் பொருட்களைக் கொடுத்து வாக்குகளை வாங்குவது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டாலும், தமது ஆசனங்களை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து பெரும்பாலான வாக்காளர்கள் தீர்மானித்திருப்பார்கள் என்று குறிப்பிட்ட மகிந்த தேசப்பிரிய, வாக்காளர்களின் முடிவுகள் மீது எவரேனும் தலையிட முனைந்தால் அவர்களை ஸ்மார்ட் அலைபேசி வைத்திருப்பவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *