Monday , September 28 2020
Breaking News

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு.

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, வடக்கு லடாக்கில் இந்தியா படைகளை குவித்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா – சீனா இடையே, கடந்த சில மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வரும் நிலையல், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, இரு தரப்பு இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இரு நாடுகளும், தமது தங்கள் படைகளை, எல்லையில் இருந்து, விலக்கி வருகின்றன.

எனினும், எல்லையில், இந்தியப் படைகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ள இந்திய அதிகாரிகள் சீனப் படைகள் போருக்கு தயாராகி வருவதற்கான அறிகுறி தெரிவதாக கூறியுள்ளனர்.

எனவே எத்தகைய நிலைமையையும் சமாளிக்க்க“ கூடிய வகையல் இந்தியப் படைகள் தயாராக உள்ளன என்றும். படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை, இன்னும் முழுமை பெறவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வடக்கு லடாக் எல்லையில் இந்தியா ஏராளமான பீரங்கிகளையும், ராணுவ தளபாடங்களையும், படையினரையும் குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *