Wednesday , September 30 2020
Breaking News

ஆப்கானிஸ்தானில், சிறைச்சாலை ஒன்றுக்குள் நுழைந்த ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் 20 மணி நேரமாக நடந்த மோதல் – 29 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி

ஆப்கானிஸ்தானில், சிறைச்சாலை ஒன்றுக்குள் நுழைந்த ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் 20 மணி நேரமாக நடந்த மோதல்களில், பயங்கரவாதிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானின் நங்கஹர் மாகாணத்தில் உள்ள ஜலலாபாத் சிறைச்சாலையை நேற்று முன்தினம் மாலை 6.30 மணி முதல் ஐஎஸ் பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த மோதல்கள் நேற்று மாலை வரை இடம்பெற்றன.

இதன்போது தக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் எட்டுப் பேரும், தலிபான் கைதிகள், சிறை அதிகாரிகள், இராணுவத்தினர் 21 பேருமாக மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

நேற்றுமுன்தினம் மாலை தற்கொலை குண்டுதாரி ஒருவர் பாரவூர்தியில் வந்து சிறைச்சாலை வாயில் மீது மோத முயன்ற போது சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த மோதல் ஆரம்பமானது.

1,793 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த சிறைச்சாலையில், தலிபான்களும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களும் அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தாக்குதலின் போது தப்பிச் சென்ற கைதிகளில் 1,025  பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்எனறும் 430  பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எஞ்சிய சுமார் 300 கைதிகளை தேடிப்பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *