Friday , September 25 2020
Breaking News

பொலன்னறுவன மாவட்டத்தில் உள்ள லங்காபுர பிரதேச செயலகத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்று.

பொலன்னறுவன மாவட்டத்தில் உள்ள லங்காபுர பிரதேச செயலகத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவரது  மகளுக்கும்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரியின் 5 வயது மகள் தற்போது பொலன்னறுவ மருத்துவமனையின் சிறப்பு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குமாரவன்ச தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பொலன்னறுவ- லங்காபுர பிரதேச செயலகப் பகுதியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதுஎன்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்காபுர தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 812 பேருக்கு கெடந்த இரண்டு நாட்களில் பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவர்களில் இருவருக்கு மாத்திரமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

இதனிடையே, நேற்று 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து வந்த நால்வரும், லங்காபுர பிரதேச செயலக் பிரிவில் ஒருவருக்குமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,828 ஆக அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *