Wednesday , September 30 2020
Breaking News

இந்திய சுதந்திர தினமான எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.

இந்திய சுதந்திர தினமான எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-ம் திகதி இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தன்று மாலையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு 2வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு இரண்டாவது முறையாகவும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடந்த 25 ஆம் திகதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் போபாலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவராஜ் சிங் சவுகானுக்கு நேற்று மீண்டும் நடத்தப்பட்ட 2வது பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *