Monday , September 28 2020
Breaking News

காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்த பின்னர், வாக்குப்பெட்டிகள், வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டன.

நாடுமுழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணும் 64 நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகள் இன்று காலை 7 மணிக்குத் திறக்கப்பட்டு, வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 7 மணிக்கே வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் 8 மணிக்குள் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதலில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும் என்றும் அடுத்த்தாக வாக்களிப்பு நிலையங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாகவே வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணும்பணி தொடங்கப்படவுள்ளது. இன்றுபிற்பகல் 2.30 மணிக்கும் 3.0 மணிக்கும் இடையில் முதலாவது தேர்தல் முடிவு எதிர்பார்க்கப்படுவதாகவும், நாளை காலை 6 மணிக்கு இறுதி முடிவு வெளியிடப்பட்டு விடும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை மறுநாள் காலைக்குள் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, வாக்கு எண்ணும் நிலையங்களில் உட்புற மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தபட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *