Tuesday , September 29 2020
Breaking News

வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சி

வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில், கடந்த பொதுத் தேர்தலை விட இம்முறை வாக்களிக்கு வீதம் கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே கடந்த 2015 பொதுத் தேர்தலை விட, அதிகளவு வாக்குகள் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளன. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் கிட்டத்தட்ட சம்மான நிலையிலேயே காணப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் பிற பகுதிகளில் வாக்களிப்பு கடுமு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த 2015 பொதுத் தேர்தலில் 80 வீதம் வாக்குகள் பதிவான குருணாகல மாவட்டத்தில் இம்முறை 65 வீத வாக்குகளே பதிவாகியுள்ளன. அங்கு 15 வீத வாக்களிப்பு வீழ்ச்சி காணப்படுகிறது.

களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் 2015 ஆம் ஆண்டில் 10 வீத வாக்களிப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கம்பகா, அனுராதபுர மாவட்டங்களில் 9 வீதமும், காலி, மாத்தறை, பொலன்னறுவ மாவட்டங்களில் 8 வீதமும், கொழும்பு, கண்டி, மாத்தளையில் 7 வீதமும், வாக்களிப்பு வீழ்ச்சி காணப்படுகிறது. பதுளையில் 6 வீதமும், அம்பாந்தோட்டை,மொனராகலவில் 5 வீதமும், நுவரெலிய, புத்தளம் மாவட்டங்களில் 4 வீதமும், வாக்களிப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *