Wednesday , September 30 2020
Breaking News

பொதுத் தேர்தலில் 71 வீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.

பொதுத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாகவும், நாடு முழுவதும் சராசரியாக 71 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு முடிந்த பின்னர் நேற்றிரவு ஊடகங்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலில் 7 இலட்சம் அஞ்சல் வாக்காளர்கள் உள்ளிட்ட 11 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும், சராசரியாக 71 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் அதிகபட்சமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 756 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும் குறைந்தபட்சமாக புத்தளம் மாவட்டத்தில் 65 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல்கள் அமைதியான முறையில் வன்முறைகள் ஏதுமின்றி நடந்து முடிந்ததாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *