Wednesday , September 30 2020
Breaking News

யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 67.7% மானவர்கள் வாக்களிப்பு

யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 67.7% மானவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளதாக யாழ். மாவட்ட செயலக தகவல்கள் கூறுகின்றன. கிளிநொச்சி தொகுதி நீங்கலாக, யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில், 479,584 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் அஞ்சல் வாக்காளர்கள் உள்ளிட்ட 324, 770 பேர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

ஊர்காவற்றுறைத் தொகுதியில் 74.28 வீத வாக்காளர்களும், வட்டுக்கோட்டை தொகுதியில், 70.37 வீத வாக்காளர்களும், காங்கேசன்துறை தொகுதியில் 48.52 வீத வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். மானிப்பாய் தொகுதியில் 69.80 வீத வாக்குகளும், கோப்பாய் தொகுதியில் 66.08 வீத வாக்குகளும், உடுப்பிட்டி தொகுதியில் 64.55 வீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை தொகுதியல் 69.71 வீத வாக்காளர்களும், சாவகச்சேரி தொகுதியில் 66.41 வீத வாக்காளர்களும், நல்லூர் தொகுதியில் 70.66 வீத வாக்காளர்களும், யாழ்ப்பாணம் தொகுதியில் 74.27 வீத வாக்காளர்களும் நேற்றைய தேர்தலில் வாக்களித்துள்ளனர். ஆஞ்சல் வாக்காளர்களில் 98 வீதம் வாக்களித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக 67.7 வீத வாக்குகள் பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தேர்தலில் ஊர்காவற்றுறை தொகுதியில் குறைந்தபட்சமாக 16,944 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதிகபட்சமாக கோப்பாய் தொகுதியில் 38,934 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்று யாழ். மாவட்டச் செயலக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *