Tuesday , September 29 2020
Breaking News

நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியான கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

 “கல்குடா தேர்தல் தொகுதியில் 76வீதமும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 78வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 73 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, கல்குடாவில் 89 ஆயிரத்து 210 பேரும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 864 பேரம் பட்டிருப்பில் 68 ஆயிரத்து 263 பேருமாக மொத்தம் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 328 பேர் வாக்களித்துள்ளனர்.

மட்டக்களப்பில் எதுவித வன்முறைச் சம்பவங்களும் பதிவுசெய்யப்படவில்லை. எனினும் 105 சாதாரண முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன.

மட்டக்களப்பில் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 67 வீதமானோர் வாக்களித்திருந்த நிலையில், இம்முறை

வாக்களிப்பு76.15வீதமாக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 பிரச்சினைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *