Monday , September 28 2020
Breaking News

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குவோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்காது போனாலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குவோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மெதமுலான ராஜபக்ச வித்தியாலயத்தில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர், தேர்தலில் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்காவிட்டாலும் நாடாளுமன்றத்தில் அதனை பெற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளா.

பொருளாதார சவால்கள் இருந்தாலும், இதனை விடப் பெரிய சவால்களை சந்தித்துள்ளோம் என்றும் இந்த சவால்களை எதிர்கொள்வது கடினமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *