Wednesday , September 30 2020
Breaking News

பொதுத்தேர்தலில் வாக்களிக்கச் சென்ற இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலில் வாக்களிக்கச் சென்ற இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.

பெக்கேகம பாடசாலையில் வாக்களிக்கச் சென்ற 81 வயதுடைய முதியவர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து களுத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள்ளனர்.

அதேவேளை, அளுத்தேபொல வலகம்ப மகாவித்தியாலயத்தில் வாக்களிக்கச் சென்ற 69 வயதுடைய பெண் ஒருவரும், வாக்களிப்பு நிலையத்தில் மயங்கி வீழ்ந்து மரணமானார் என்று செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *