Monday , September 28 2020
Breaking News

மும்பையில் 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த கடும் மழை.

மும்பையில் 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த கடும் மழையால் நகரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மும்பையில் ஓகஸ்ட் 8ம் திகதி வரை கடும்மழை கொட்டும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று மும்பையில் 10 மணி நேரத்தில் 250 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.

மும்பையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மும்பையின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் மழைநீரால் மூழ்கியது.

தண்டவாளங்கள் மழைநீரால் மூழ்கின. இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

கனமழை தொடரும் என்பதால், மும்பை நகர மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

15 ஆண்டுகளுக்குப் பின்னர்  இப்படியான கடும் மழையை பார்ப்பதாக மும்பையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை தவிர தானே, ராய்கட், புனே, ரத்னகிரி மாவட்டங்களும் கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *