Saturday , September 26 2020
Breaking News

லடாக் எல்லையில் இருந்து சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ளவில்லை – இந்திய  எல்லையில் பதற்றம்.

இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்களுக்குப் பின்னரும்,  லடாக் எல்லையில் இருந்து சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ளாததால், இந்திய  எல்லையில் பதற்றம் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோசமடைந்து வருகிறது. இரண்டு நாடுகளின் இராணுவத்தினரும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து, அங்கு  பெருமளவு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பல கட்டங்களாக, பல்வேறு மட்டங்களிலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதன்பின்னரும், பாங்காங், தேப்சாங், கோக்ரா பகுதிகளில் இருந்து சீனா தன் படைகளை திரும்பப் பெறவில்லை.

இந்தப் பகுதிகளில், அதிக அளவு சீன இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளதுடன், ஆயுதங்கள், பீரங்கிகள் என, தளபாடங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘இரு நாட்டின் உயர்நிலை அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இடையேயான பேச்சு நடப்பதே, உடனடி தீர்வாக இருக்கும்என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *