Wednesday , September 30 2020
Breaking News

கருணாஸ் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று.

தமிழகத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது கருணாசுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மயிலாடுதுறை பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கத்திற்கு கொரோனா உறுதியான நிலையில் பவுன்ராஜுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தற்போது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *