Thursday , September 24 2020
Breaking News

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்து.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்தினால், 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று பெய்ரூட் ஆளுநர் மார்வான் அப்போத் தெரிவித்துள்ளார்.

வெடிவிபத்தை அடுத்து லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவோன் நேற்று அவசர அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, 2 வார காலத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை பெய்ரூட் வெடிவிபத்தினால், லெபனானில் நடந்த போர்களை விட அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 135 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 5000 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெய்ரூட் நகரம் 40 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மீண்டு வர பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பெய்ரூட் ஆளுநகர் மார்வன் அப்போத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது வரை 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளார்கள். என்றும், சேத மதிப்பு 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மக்ரான் பெய்ரூட் செல்ல உள்ளார். இரு விமானங்களில் பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த மீட்புப்படையினரும் பெய்ரூட் செல்ல உள்ளனர்.

ஐரோப்பிய ஆணையம் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினரை மீட்புபணிக்காக அனுப்ப உள்ளது.

செக் குடியரசு, , ஜெர்மனி, கிரீஸ், போலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் பெய்ரூட் சம்பவத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *