Wednesday , September 30 2020
Breaking News

மான்செஸ்டர் டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் மழை குறுக்கிட்டதால் 49 ஓவருடன் தடைப்பட்டது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று  மான்செஸ்டரில் தொடங்கியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த்து.

ஷான் மசூட், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து கேப்டன் அசார் அலி களம் இறங்கினார். அவர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி வெளியேறினார்.

அப்போது பாகிஸ்தான் 43 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஷான் மசூட் உடன் இளம் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். களம் இறங்கியதும் பாபர் அசாம் சற்று தடுமாறினார்.

15-வது பந்தில் முதல் ஓட்டத்தை தொடங்கிய அவர்,  அதன்பின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

70-வது பந்தில் அரைசதத்தை தொட்ட அவர்  கடைசி 56 பந்தில் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் ஷான் மசூத்தும் அரைசதம் நோக்கி நகர்ந்தார்.

பாகிஸ்தான் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பாபர் அசாம் 69 ஓட்டங்களுடனும், ஷான் மசூத் 46 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் பெரும்பகுதி தடைபட்டுள்ளது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *