Wednesday , September 30 2020
Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 ஆசனங்களே கிடைத்தன.

கடும் போட்டி நிலவிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை வென்றிருப்பதுடன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன, தலா ஒவ்வொரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.

அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், இலங்கை தமிழ்

அரசுக் கட்சிக்கு, 112,967   வாக்குகள் கிடைத்துள்ளன. இங்கு 31.46 வீத வாக்குகளைப் பெற்ற தமிழ் அரசுக் கட்சிக 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55,303        வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, 49,373 வாக்குகளுடன் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளதுடன், முதல் முறையாக தனித்து ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

நான்காவது இடத்தைப் பிடித்துள்ள ஈபிடிபிக்கு 45,797         வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கிறது.

35,927         வாக்குகளைப் பெற்று 5 ஆவது இடத்தைப் பிடித்த  தமிழ் மக்கள் தேசியக் கூடணிக்கு, ஒரு ஈசனம் கிடைத்திருக்கிறது.

சந்திரகுமார் தலைமையிலான சுயேட்சைக்குழு          16,220 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி13,564 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 6,522 வாக்குகளையும்,        பட்டம் சின்னத்தில்  2 ஆம் இலக்க சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட மக்கள் மேம்பாட்டுக்கான ஐக்கிய முன்னணி  5,492 வாக்குகளையும், மாம்பழம் சின்னத்தில் 8 ஆம் இலக்க சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட பொ. ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம்,       2,128          வாக்குகளையும் பெற்றுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த 5 ஆசனங்களில் இரண்டு பறிபோயிருக்கிறது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆசனத்தைப் பறிகொடுத்துள்ளது.

இந்த இடங்களைக் கைப்பற்றி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன, நாடாளுமன்றம் செல்லவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *