Tuesday , September 29 2020
Breaking News

யாழ்ப்பாணத்தில் விருப்பு வாக்குகளில் அங்கஜன் முதலிடத்தில் இருப்பதாக தகவல்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களின் பட்டியலில், 36,300 வாக்குகளுடன்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இரண்டாவது இடத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளான  சிறிதரன் சிவஞானம் 35, 884 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

32, 156 வாக்குகளுடன் டக்ளஸ் தேவானந்தாவும்,  31, 658 வாக்குகளுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், 27, 734 வாக்குகளுடன் எம்,ஏ. சுமந்திரனும்,  23, 740  வாக்குகளுடன் சித்தார்த்தனும், 21, 554 வாக்குகளுடன் சி.வி. விக்னேஸ்வரனும் நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக அதிகாரபூர்வற்ற தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *