Monday , September 28 2020
Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை இம்முறை இழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை இம்முறை இழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

இலங்கை தமிழரசு கட்சிக்கு 79, 460 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 67,692 வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  34,428 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  33, 424 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய அமைதிக் கூட்டமைப்பு, 31,054         வாக்குகளைப் பெற்றிருந்த போதும் ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி, 28,362       வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 8,113          வாக்குகளையும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, 4,960 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1,203 வாக்குகளையும் பெற்றுள்ளன.

கடந்த 2015 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆசனங்கள் கிடைத்திருந்தன. இம்முறை 2 ஆசனங்களே கிடைத்துள்ள நிலையில், முன்னர் ஆசனங்களைக் கொண்டிராத தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஒரு ஆசனத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *