Friday , September 25 2020
Breaking News

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி  இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி  இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.

திருகோணலை மாவட்டத்துக்கான இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள்‌ சக்தி  86,394 வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், இரண்டு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு  68,681 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 39, 570 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு  திருகோணமலை மாவட்டத்தில் 3775 வாக்குகளும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரசுக்கு 2,745 வாக்குகளும் கிடைத்துள்ளன.

எட்டாவது இடத்தைப் பிடித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு, 1,625 வாக்குகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *