Thursday , September 24 2020
Breaking News

அம்பாறை மாவட்டத்தில், தமிழ்ப் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில், சிறிலங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தமிழ்ப் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

அம்பாறை தேர்தல் மாவட்டத்துக்கான இறுதி முடிவுகளின் அடிப்படையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன 126,012 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்படி, அந்தக் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 102,274      வாக்குகளுடன் 2 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 43,319 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும், தேசிய காங்கிரஸ் 38,911 வாக்குகளுடன் 1 ஆசனத்தையும் பெற்றிருக்கின்றன.

அகில இலங்கை தமிழர் மகாசபைக்கு 29,379 வாக்குகளும், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு, 25,255வாக்குகளும் கிடைத்த போதும் ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும்  விநாயகமூர்த்தி முரளிதரன் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பில் களமிறங்கியதால், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் வாக்குகள் பிளவுபட்டு, தமிழ்ப் பிரதிநிதிகள் எவரும் தெரிவு செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பொலன்னறுவ மாவட்டத்தில், அதிகபட்ச விருப்பு வாக்குகளுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவ மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு 111,000 இற்கும் அதிகமான விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அத்துடன் ரொஷான் ரணசிங்க , சிறிபால கம்லத், அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோரும் பொதுஜன பெரமுன சார்பில் தெரிவாகியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *