Wednesday , September 30 2020
Breaking News

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை நேரடியாக எந்த ஆசனங்களும் கிடைக்கவில்லை. தேசியப்பட்டியல் மூலம் ஒரு அசனம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் ரணில் விக்ரசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசமும் தோல்வியடைந்துள்ளார்.

நுவரெலிய மாவட்டத்தில் நவீன் திசநாயக்கவும், கம்பகா மாவட்டத்தில், ருவன் விஜேவர்த்தன, அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் தோல்வியத் தழுவியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *