Monday , September 28 2020
Breaking News

ராமர் கோவில் பூமி பூஜையை அடுத்து அசாமில் இனக்கலவரம் வெடித்தது.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு அசாமில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியைத் தொடர்ந்து இனக்கலவரம் வெடித்துள்ளது. இதையடுத்து அங்கு காலவரயின்றி ஊரடங்கு முல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அயோத்தியில் ராமர் கோவில்கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள் வெற்றிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அசாம் மாநிலத்திலும் இந்த விழா கொண்டாடப்பட்ட போது ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக மாறியது.

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தை சேர்ந்த தெலமாரா காவல்நிலையத்திற்குட்பட்ட தேக்கியாஜூலி பகுதியில், ராமர் கோவில் பூமிபூஜை விழாவை கொண்டாடுவதற்காக பாஜ்ரங்தள் அமைப்பினர் மோட்டார்சைக்கிள் பேரணி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கு கொவிட்-19தடை உத்தரவு அமுலில் இருக்கும் நேரத்தில் பேரணி நடத்தக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த சிறுபான்மை அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. மோதலில் பலர் காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள்  தீக்கிரையாகின. கலவரத்தை கட்டுப்படுத்த பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் வாகனம் தீவைக்கப்பட்டதால், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிநிலை உருவானது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி இருப்பதாகவும் நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *