Monday , September 28 2020
Breaking News

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பாரிய குண்டுவெடிப்பில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளை பிரான்ஸ் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பாரிய குண்டுவெடிப்பில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளை பிரான்ஸ் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

பெய்ரூட் குண்டுவெடிப்பில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5000 பேர் காயமைடைந்துள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லெபனானின் நட்பு நாடான பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.

பெய்ரூட் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர். மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை சீராக்க லெபனானின் நட்பு நாடான பிரான்ஸ் ஆவன செய்யும் எனவும் மக்ரான் உறுதி அளித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெபனான் குடிமக்களுக்கு உரிய மருத்துவ உதவி மற்றும் நிதி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *