Wednesday , September 30 2020
Breaking News

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது, மழை அடிக்கடி குறுக்கிட்டதால் முதல் நாளில் 49 ஓவர்களே பந்து வீசப்பட்டன.

பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பாபர் அசாம் 69 ஓட்டங்களுடனும், ஷான் மசூத் 46 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கிய போது, பாகிஸ்தான் வீர்ர் பாபர் அசாம் 69 ஓட்டங்களிலேயே ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ஆசாத் ஷபிக் 7 ஓட்டங்களிலும், முகமது ரிஸ்வான் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் ஷான் மசூத் உறுதியாக நின்று விளையாடினார், அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் ஒத்துழைப்பு கொடுக்க 251 பந்துகளை சந்தித்து ஷான் மசூத் சதம் அடித்தார்.

சதாப்கான் 45 ஓட்டங்களில் வெளியேறியதை அடுத்து வந்த யாசிர் ஷா 5 ஓட்டங்களிலும், முகமது அப்பாஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தர்.

ஷான் மசூத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி  319 பந்துகளில் 156 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 109.3 ஓவரில் 326 ஓட்டங்கள் எடுத்து எல்லா விக்கெட்டுகளையும் இழந்த்து.

இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர் தலா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் மற்றும் பெஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *