Wednesday , September 30 2020
Breaking News

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார், விக்னேஸ்வரனுடன் இணைந்து செயற்படத் தயார் – சுமந்திரன் அறிவிப்பு.

பொதுத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர்கள் தம்முடன் இணைந்து செயற்படவில்லையெனில், நாடாளுமன்றத்தில், தாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், கட்சி மீதான நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை, பொறுப்புணர்வுடன் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் கூறியுள்ள சுமந்திரன், உள்ளக ஆய்வுகள் மூலம் பின்னடைவுக்கான காரணங்களை கண்டறிந்து கட்சியை மறுசீரமைத்து, மக்கள் மயப்படுத்திய கட்சியாக மாற்றுவோம் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் வாக்குகள், கடும் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் பக்கமும், அரசுடன் இணைந்து செயற்படும் அணிக்கும் சென்றுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுடன் இணைந்து செயற்படும் அணிகளின் பக்கம் அதிகம் சென்றுள்ளதால், அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதிதுவம் இழக்கப்பட்டுள்ளதாகவும், சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் 2 ஆசனங்களையும், வன்னியில் 3 ஆசனங்களையும், யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களையும்  இழந்துள்ளோம்  என்றும், குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இழப்பு மோசமான இழப்பு என்றும் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் தலைமை தேர்தலி தோற்று விட்டது என்று குறிப்பிட்ட சுமந்திரன், கட்சியின் தலைவரும் செயலாளரும் தோல்வியடைந்து விட்டனர் என்றும், இதுகுறித்து கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சிக்குள்ளேயே சில வேட்பாளர்களைத் தோற்கடிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன என்றும், கூறிய சுமந்திரன், தமிழ் அரசுக் கட்சி இளைஞர்களுடன் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும்,  கட்சியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் கட்சிக்கு இடித்துரைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

கட்சிக்குள் மாற்றம் நடக்க வேண்டும் என்றும், அதனை நாங்கள் செய்வோம் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

அதேவேளை தேசியப்பட்டியல் ஆசனம் யாருக்கு என்பது குறித்து, கட்சி இன்னமுமு முடிவு செய்யவில்லை என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *