Monday , September 28 2020
Breaking News

பொதுத் தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக தான் கருதவில்லை – இரா.சம்பந்தன்.

இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக தான் கருதவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள தமது இல்லத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பில்  கருத்து வெளியிட்ட போதேஇரா.சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

இம்முறை இடம்பெற்ற தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளைப் பிரித்துள்ளனர் என்றும், இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பிற்கு ஒன்பது ஆசனங்களே கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான குடிமக்களாக வாழக் கூடிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் இரா சம்பந்தன் குறிப்பிட்டார்.

ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம்என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *