Thursday , September 24 2020
Breaking News

களனி ரஜமகா விகாரையில் நாளை மறுநாள் பிரதமராகப் பதவியேற்கிறார் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் தற்போதைய பிரதமருமான, மகிந்த ராஜபக்ச, நாளை மறுநாள்  பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள  நிலையிலேயே, பிரதமர் மகிந்த ராஜபக்ச  நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு களனி ராஜமஹா விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

அதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை  25 முதல் 28 ஆக குறைக்கப்பதற்கு முடிவு செய்யபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஏனைய அமைச்சர்கள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *