Tuesday , September 29 2020
Breaking News

நாடாளுமன்றத்துக்கு 25 தமிழ்ப் பிரதிநிதிகள் நேரடியாகத் தெரிவு – தேசியப் பட்டியலிலும் குறைந்தது 2 பேருக்கு வாய்ப்பு.

நேற்று முன்தினம் நடந்த பொதுத் தேர்தலில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், 9 பேரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 7 பேரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 2 பேரும்ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 2 பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் ஒருவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒருவருமாக 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி சார்பில்சிவஞானம் சிறிதரன்,எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்ஆகியோர் நாடாளுமன்றம் செல்கின்றனர்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் சீ.வி. விக்னேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  சார்பில் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி  சார்பில் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். யோகராஜலிங்கம், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் குலசிங்கம் திலீபன் ஆகிய நான்கு  தமிழ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், சாணக்கியன் ராகுல், கோவிந்தன் கருணாகரன், ஆகியோரும்,  ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவின் சார்பில் எஸ். வியாழேந்திரனும்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனும் நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தி  சார்பில் போட்டியிட்ட மனோ கணேசன் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேலுகுமார் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், ஆகியோரும், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோரும், நாடாளுமன்றத்துக்கு நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைத்துள்ள இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களின் மூலமும் மேலும் இரு தமிழர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டவுள்ளது,

இது தவிர, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலிலும் தமிழர்களுக்கு இடமளிக்கப்பட்டால், 9 ஆவது நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் 27 ஐ விட அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *