Tuesday , September 29 2020
Breaking News

புதிய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8 ஆக வீழ்ச்சி

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 உறுப்பினர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நேற்று முன்தினம் நடந்த பொதுத் தேர்தலில் 8 பெண் உறுப்பினர்கள் மாத்திரம் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இரத்திரபுரி மாவட்டத்தில் இருந்து பொதுஜன பெரமுன சார்பில் மாத்திரம், பவித்ரா வன்னியாராச்சி, முடித்த சொய்சா, ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலதா அத்துகோரளவுமாக, மூன்று பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் இருந்து பொதுஜன பெரமுன சார்பில் ராஜிக விக்ரமசிங்கவும், கம்பகா மாவட்டத்தில் இருந்து பொதுஜன பெரமுன சார்பில் சுதர்சனி பெர்னான்டோ புள்ளோ மற்றும் கோகிலா குணவர்த்தன ஆகியோரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் இருந்து பொதுஜன பெரமுன சார்பில் கீதா குமாரசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மாத்தளை மாவட்டத்தில் இருந்து றொகினி கவிதாரத்னவும், நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

8 ஆவது நாடாளுமன்றத்தில் 12 பெண் உறுப்பினர்கள் அங்கம் வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *