Thursday , September 24 2020
Breaking News

அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமர் வேட்பாளர் என்று  ரணில் விக்ரமசிங்க படைத்திருந்த சாதனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச முறியடித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமர் வேட்பாளர் என்று  ரணில் விக்ரமசிங்க படைத்திருந்த சாதனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச முறியடித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில், போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவுக்கு இம்முறை 527,364 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

கடந்த 2015 பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க கொழும்பு மாவட்டத்தில், 500,566 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.

அவரது அந்தச் சாதனையை முறியடித்து மகிந்த ராஜபக்ச 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அதிகளவு விருப்பு வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு 166,660 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

மேலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, 85,330 விருப்பு வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, சமல் ராஜபக்சவின் மகனும், முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சருமான ஷசீந்திர ராஜபக்ச மொனராகல மாவட்டத்தில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு, 104,729 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *