Tuesday , September 29 2020
Breaking News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே அதிகபட்ச விருப்பு வாக்குகளுடன் தெரிவு

நேற்று முன்தினம் நடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பகா மாவட்டங்களில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே அதிகபட்ச விருப்பு வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் கடற்படை அதிகாரியும், வியத்மக அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான றியர் அட்மிரல் சரத் வீரசேகர 328,092  வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இவரையடுத்து, கடும்போக்காளர்களான விமல் வீரசன்ச 267, 084 வாக்குகளையும், உதய கம்மன்பில  136,331 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

கம்பகா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் முக்கிய தூணாக விளங்கிய பிரசன்ன ரணதுங்கவை பின்தள்ளிக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பைச் சேர்ந்த நாலக கொடஹேவ முதல் இடத்தைப்பிடித்துள்ளார்.

நாலக கொடஹேவவுக்கு 325,479 வாக்குகளும், பிரசன்ன ரணதுங்கவுக்கு 316,544 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச, 305,744 விருப்பு வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கம்பகா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 110,535 விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *