Monday , September 28 2020
Breaking News

டிக்டொக் செயலிக்கு தடைவிதித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

சீனாவின் டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு தடை விதித்துள்ளார் மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து அமுலுக்கு வரும் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்த நிலையில் தடை உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த தடை உத்தரவு குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவில், சீன நிறுவனங்கள் உருவாக்கிய செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பரந்து கிடக்கின்றன. இந்த செயலிகளால் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்  ஒரு குறிப்பிட்ட செயலியின் செயல்பாட்டை பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் தேவை இருக்கிறது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக் கொள்கிறது.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்வற்றை செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதைத் கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும். இந்த அச்சுறுத்தலால் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறேன். இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும்.

இந்த தடை உத்தரவை அமுல்படுத்த வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் அளிக்கிறேன்.

அதேபோல சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீசாட் சமூக வலைத்தளம், மற்றும் பணம் அனுப்பும் தளத்தையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *