Monday , September 28 2020
Breaking News

முக கவசம் அணியாவிட்டால் 1000 ரூபா அபராதம்- குஜராத் அரசு உத்தரவு.

குஜராத்தில் பொது இடங்களில்முக கவசம்அணியாமல் சென்றால் 1000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் நோய் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த அமாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையிலேயே பொது இடத்தில்முக கவசம் அணியாமல் சென்றால் 1000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை, கொரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது.

மாநிலத்தில் பாதிப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கான அபராத தொகை 500 ரூபாவில் இருந்து 1000 ரூபாவாக உயர்த்தப்படுவதாக குஜராத் நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி இந்த அபராத தொகை இன்று முதல் அமுலுக்கு வரும். கடந்த மாதம் அபராத தொகை 200 ரூபாவில் இருந்து 500 ரூபாவாக உயர்த்தப்பட்டது.” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *