Friday , September 25 2020
Breaking News

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா கொரோனா

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேறு காரணத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த ஒரு வார காலத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும், அவர் தமது பதிவில் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன் முன்பாகவே அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது, சுவாசக்கருவிகளின் உதவியுடன் பிரணாப் முகர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகபிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *