Wednesday , September 30 2020
Breaking News

8 மாநில முதலமைச்சர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதலமைச்சர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது டெல்லியில் நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது. ஆனால் மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.

இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவாக, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதலமைச்சர்களுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *