Monday , September 28 2020
Breaking News

செனட் உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு சீன அரசு தடை

அமெரிக்க செனட் உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் அரசியல் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சீன அதிகாரிகள் 11 பேருக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. அதற்கு பதிலடியாகவே, சீனா இந்த தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் உள்ளிட்ட 11 பேருக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.

தடை விதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், வர்த்தக ரீதியில் தொடர்பில் இருக்கும் அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்த்து. இந்த நிலையில், அமெரிக்காவின் தவறான நடத்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹொங்கொங் தொடர்பான பிரச்சினைகளில் மோசமாக நடந்து கொண்ட தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக, சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்க அதிகாரிகள் மீது எந்த மாதிரியான தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து லிஜியன் எந்த தகவலையும் வெளியிடவில்லை. சீனா தடை விதித்துள்ளவர்களில், அமெரிக்க செனட் உறுப்பினர்களான டெட் க்ரூஸ், மார்கோ ரூபியோ, டாம் காட்டன், ஜோஷ் ஹவ்லி மற்றும் பாட் டூமி மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் கிறிஸ் ஸ்மித், மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *