Monday , September 28 2020
Breaking News

வீட்டில் இருந்தே முகத்தை அழகாக மாற்றும் கற்றாழை பவுடர்.

நமது உடல் முழுவதையும் பாதுகாக்க கூடிய இந்த கற்றாழை. கற்றாழையில் பக்றீரியா நுண்ணுயிரியை எதிர்த்து போராடும் சக்தி உள்ளது. சேற்று கற்றாழையில் நீர்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதனால் முகம் மற்றும் தலை முடியினை வறட்சி அடையாமல் பாதுகாத்து கொள்ளும்.

கற்றாழையில் அதிகமாக விட்டமின் சி, அமில தன்மை இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கற்றாழையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். கற்றாழையில் இருக்கும் ப்ரோடீன், தாதுக்கள், விட்டமின் தலையின் வேர் பகுதிகளுக்கு மற்றும் சருமத்திற்கு எப்போது ஈரப்பதத்தினை கொடுக்கும். முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் சரும பருக்கள், கரும்புள்ளிகளை கற்றாழை அகற்றிவிடும்.

விளக்கம் 1 :- முதலில் கற்றாழையின் ஒரு பகுதியை எடுத்து அதன் ஓர முட்பகுதிகளை நறுக்கிக்கொள்ளவும். அடுத்து இதனை பவுடர் செய்வதனால் கற்றாழை மேல் உள்ள தோல் பகுதிகளை நீக்க வேண்டியதில்லை. அடுத்ததாக கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கி பவுலில் போட்டுக்கொள்ளும்.

விளக்கம் 2 :- இப்போது பவுலில் நறுக்கி வைத்த கற்றாழையை அகலமாக தட்டில் வைத்து கொள்ள வேண்டும். நறுக்கிய கற்றாழையை வெயிலில் 4 நாட்களுக்கு நன்றாக காயவைக்க வேண்டும்.

விளக்கம் 3 :- வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். அவ்ளோதாங்க முகத்தை பாதுகாக்கும் இயற்கையான கற்றாழை பவுடர் ரெடி. இந்த கற்றாழை பவுடரை 1 வருடம் வரையிலும் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். சருமம் அழகாக வேண்டுமென்றால் இயற்கையான முறையில் கற்றாழை பவுடர் ரெடி செய்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *