Wednesday , September 30 2020
Breaking News

தமிழ் கட்சிகள் ஒன்றிணையா விட்டாலும், ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சித்தார்த்தன்

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தமிழ் கட்சிகள் ஒன்றிணையா விட்டாலும், ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என்று, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார். சுன்னாகத்தில், உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களை கடும் நெருக்கடியான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்ட சித்தார்த்தன், இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் தம்முன்“ ஒன்றிணையவிட்டாலும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எமது கட்சியுடன் இணையுங்கள் என்று அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுப்பதாகவும் சித்தார்த்தன் கூறினார். மக்களுக்கு முன்பாக ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல், உண்மையிலேயே ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றும், தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *