Wednesday , September 30 2020
Breaking News

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிட்டுள்ளார். இதன்படி, நாளை பதவியேற்கவுள்ள புதிய அமைச்சரவையில், 28 அமைச்சுக்கள் இருக்கும் என்றும் இவற்றுக்கு மேலதிகமாக, 40 இராஜாங்க அமைச்சுக்கள் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 பேர் கொண்ட அமைச்சரவைக்குள்ளேயே, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருக்கும் அமைச்சுக்களும் உள்ளடக்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, புதிய அமைச்சரவையில், பாதுகாப்பு, நிதி, புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி, நீதித்துறை, வெளிவிவகாரம், பொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, கல்வி, சுகாதாரம், தொழில் துறை, சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு, விவசாய வேளாண்மை, நீர்ப்பாசனம், காணி, கடல் வளம், பெருந்தோட்டம், நீர்வழங்கல், மின்சாரம், ஆற்றல், நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை, போக்குவரத்து, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை, சுற்றுலா, வர்த்தகம், தொழில், ஊடகத்துறை ஆகிய 28 அமைச்சுக்களே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, சுகாதாரம், நீர்ப்பாசனம் ஆகிய அமைச்சுக்களு தலா இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்ப, விவசாய மற்றும் பெருந்தோட்டத் துறை, கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களுக்கு தலா 3 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். கல்வி அமைச்சுக்கு நான்கு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சுக்களுக்கு தலா ஒரு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *