Monday , September 28 2020
Breaking News

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது – கண்டியில் பறக்கும் தனி சிங்கக் கொடி

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இன்று காலை கண்டியில் நடைபெறவுள்ள நிலையில், கண்டி நகரில் தனி சிங்களபௌத்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கொடிகளால் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர், முதலாவது அமைச்சரவையை இன்று அமைக்கவுள்ளது.

ஏற்கனவே பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில், இன்று காலை கண்டியில் உள்ள தலதா மாளிகையின் மண்டபத்தில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதற்கான அலங்காரப் பணிகள், நேற்று கண்டி நகரிலும், நிகழ்வு நடைபெறவுள்ள இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று சுகாதர வழிகாட்டு முறைகளின் படி, இந்த நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்டளவானோரின் பங்கேற்புடனேயெ இடம்பெறவுள்ளது.

இன்றைய நிகழ்வில் அமைச்சரவையில் இடம்பெறும் 28 அமைச்சர்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ளவுள்ளனர்.

40 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ள நிலையில், அவர்களும் இன்று பொறுப்பேற்பார்களா என்பது குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பைக் கொண்டாடும் வகையில் கண்டி நகரம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதனை முன்னிட்டு கண்டி நகரில் பௌத்த கொடிகளும், தனி சிங்கள இனத்தைப் பிரதிபலிக்கும் சிங்க்க் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

இலங்கையின் தேசியக் கொடியில் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும், வர்ணங்கள் நீக்கப்பட்டு தனி சிங்கள இனத்தைப் பிரதிபலிக்கும் சிங்கக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளமை குறித்து பலத்த சர்ச்சைகள் தோன்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *