Saturday , September 26 2020
Breaking News

பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாவட்ட, பிரதேச செயலகங்கள் – இராணுவத்தின் வசமாகிறது சிவில் நிர்வாகம்

பொது நிர்வாக அமைச்சை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதன் மூலம், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள், பாதுகாப்பு அமைச்சின் வசமாகும் நிலை உருவாகியுள்ளது.

இது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமமானது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

நாடு இராணுவ மயப்படுத்தப்படுவதாக முன்னர் தாங்கள் கூறியபோது அதனை அரசாங்கமும்அரசுடன் இணைந்த கட்சிகளும் நிராகரித்திருந்தன என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் விடயதானங்கள், தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளதானது, மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம், அனைத்து சிவில் அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் அபாய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் சிவில் நிர்வாகங்களுடனேயே சர்வதேச நாடுகள் தொடர்பினை பேண விரும்பும் நிலையில்அந்தநிலை தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிவில் நிர்வாகத்தை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அத்தனை தமிழ் அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *