Monday , September 28 2020
Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தப் பேச்சும் இல்லை – பசில், தினேஸ் திட்டவட்டமாக அறிவிப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்றும், அவர்களின் நிபந்தனைகளை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியஅமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறியுள்ள பசில் ராஜபக்ச, அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டிய தேவையும் இப்போது எழவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்குக்கு மாகாண சபையை வழங்கியிருந்தோம்அதனூடாகப் அவர்கள் பயன்பெறவில்லை என்றும், முதல் தடவை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த முறை நிச்சயம் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவோம் என்றும் பசில் ராஜபக்ச, தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசே யாழ்தேவியை  காங்கேசன்துறை, தலைமன்னார் வரை கொண்டு சென்ற போதும்ஐக்கிய தேசியக் கட்சியையே கூட்டமைப்பு ஆதரித்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஐ.தே.க. ஆட்சியைப் பாதுகாத்து, அதன் வரவு – செலவுத் திட்டங்களுக்கும் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியது  என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடாக அல்லாமல், வடக்கு, கிழக்கில் எம்மால் தனித்து இயங்கி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும் பசில் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *