Monday , September 28 2020
Breaking News

ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டத்தில் இலங்கை நிலை குறித்து மீளாய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 130 ஆவது அமர்வில் இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளின் நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ளதாகஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் வரும், ஒக்ரோபர் 12ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 6ஆம் திகதி வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 130 ஆவது அமர்வு இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரிலேயே இலங்கை மற்றும் 11 நாடுகளின் நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.

அரச தரப்பின் அறிக்கைஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுவான இணை ஆவணம், சிக்கல்கள் தொடர்பான பட்டியல்பிரச்சினைகள் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவல்கள், மற்றும் ஏனைய பங்குதாரர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் ஆகியன குறித்தே இந்தக் கூட்டத்தொடரில் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மீளாய்வு ஐ.நா மனித உரிமைகள் குழுவினால் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், முதல் முறையாக இந்தக் கூட்டத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *